
கொழும்பில் வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல சுவிஸ் எயார் விமானம் ஒன்று தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சூரிச் விமான நிலையத்தில் இந்த விமானம் தயார் நிலையில் உள்ளதாக அங்கு சேவை செய்யும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தூதரக அதிகாரியை சுவிட்சர்லாந்திற்கு அனுப்புமாறு சுவிஸ் இராஜாங்க செயலாளர் மேரிஸ், கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எப்படியிருப்பினும் அந்த சுவிஸ் விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவருவதற்கு சிவில் விமான சேவை அதிகாரிகள் இதுவரையில் அனுமதி வழங்கில்லை.
எனினும் கடத்தப்பட்டதாக கூறப்படும் அதிகாரியை எதிர்வரும் 9ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சர்ச்சைக்குரிய இந்த சம்பவம் தொடர்பல் இதுவரையில் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளிடம் அவரிடம் வாக்குமூலம் பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply