கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலி! திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை – மனையாவெளிப் பகுதியில் சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டின் வளாகத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவன் 4 வயதுடைய செல்வராஜா சினியோன் எனத் தெரியவருகின்றது.

இவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *