
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி ஒரு அனிமேஷன் கதாபாத்திரம் என மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் பொல்லார்ட் புகழ்ந்துள்ளார்.
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டியில் கோஹ்லியின் அதிரடியால் இந்தியா அபார வெற்றிப்பெற்றது. கோஹ்லி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 94 ஓட்டங்கள் எடுத்தார்.
போட்டிக்கு பின்னர் பேட்டியளித்த மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் பொல்லார்ட் கூறியதாவது, கோஹ்லி ஒரு அனிமேஷன் கதாபாத்திரம், ஒரு சிறந்த துடுப்பாட்டகாரர் மற்றும் அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர்.
நாங்கள் நன்றாக துடுப்பாடினோம் என்று நினைக்கிறேன், நாங்கள் 200 ஒட்டங்ளுக்கு மேல் அடித்தோம், அது பெரும்பாலும் பலன் அளிக்கவில்லை.
நாங்கள் பந்துவீச்சில் 23 கூடுதல் ஓட்டங்களை கொடுத்தோம், 14 முதல் 15 அகலப்பந்து வீசினோம், எனவே அவற்றை கூடுதல் பந்துகள் மற்றும் கூடுதல் ஓவர்களான மாறின.
இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக பல கூடுதல் ஓட்டங்களை கொடுக்கும்போது, எதிரணி சிக்கலுக்கு ஆளாகிறீர்கள். நேற்று நாங்கள் இரண்டு ‘நோ பால்’ வீசினோம், அதிலும் கவனம் செலுத்த வேண்டும் என பொல்லார்ட் கூறினார்.
Leave a Reply