
வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நின்ற மாமரத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.
ஊர்காவற்துறை பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட நாரந்தனை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் புளியங்கூடல் ஊர்காவற்துறை பகுதியினை சேர்ந்த வி.வசீகரன் (வயது 32) என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையினை ஊர்காவற்துறை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply