
சீனாவில் நிறைமாத கர்ப்பிணி அமர்ந்து ஓய்வெடுக்க கணவர் ஒருவர் தனது முதுகையே இருக்கையாக அளித்த சம்பவம் பல மில்லியன் மக்களின் இதயங்களை தொட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பல மில்லியன் மக்களின் பார்வையை பெற்றுள்ளது.
சீனாவில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் வழக்கமான மருத்துவ சோதனைக்காக கணவருடன் மருத்துவமனை சென்றுள்ளார்.
அதிக கூட்டம் காணப்பட்டதால் மருத்துவரை சந்திக்க தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கர்ப்பிணி அமர்ந்து ஓய்வெடுக்க இருக்கை ஒன்றை தேடியுள்ளார்.
ஆனால் அங்கிருந்த மக்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் தமது மனைவியின் நிலையை புரிந்து கொண்ட கணவன், தரையில் அமர்ந்து, தமது முதுகை மனைவிக்கு காட்டியுள்ளார்.
சுவற்றைப் பிடித்தப்படி அந்த கர்ப்பிணியும் கணவரின் முதுகில் மெதுவாக அமர்ந்து ஓய்வெடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளியானது அப்பகுதி பொலிசாரால் வெளியிடப்பட்டு பல மில்லியன் மக்களின் இதயத்தை தொட்டுள்ளது.
பலரும் அந்த கணவரை மனம் திறந்து பாராட்டியுள்ளதுடன், சீனாவின் சிறப்பான மனிதன் மட்டுமல்ல, நல்ல கணவரும் கூட என பாராட்டியுள்ளனர்.
Leave a Reply