
கிளிநொச்சியின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சில வீடுகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த நிலையில் வெள்ள நீரில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் வழிகாட்டலின் கீழ் இளைஞர் அணிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த மீட்பு பணியானது நேற்று பகல் முதல் இரவு வரை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று காலையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நெறிப்படுத்தலில் கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் க.பொ.த சாதரணதர மாணவர்கள் பரீட்சை எழுத செல்வதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டுள்ளனர்.





Leave a Reply