
அரிசியின் விலை உயர்வடைவதை கட்டுப்படுத்த அரசாங்கம் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அரிசியை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளது.
சிவப்பு மற்றும் வெள்ளை அரிசியின் விலை கடந்த மூன்று வாரங்களில் 15 ரூபாவினால் உயர்வடைந்தன.
இதனையடுத்தே தமது கையிருப்பில் உள்ள அரிசியை சந்தைக்கு விநியோகிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக சர்வதேச வர்த்தகம் மற்றும் நலன்துறை இராஜாங்க அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 95 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த நாடு 110 ரூபாவாக உயர்ந்துள்ளது. 90 ரூபாவாக இருந்த சிவப்பு அரிசி 110 ரூபாவாக உயர்ந்துள்ளது.
100 ரூபாவாக இருந்த சம்பாவும் தற்போது 110 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை. எனவே, அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply