
இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 9.5 சத வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கைக்கு ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 582 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்த நிலையில், இவ்வருடம் நவம்பர் மாதம் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 984 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் காரணமாகவே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில், அடுத்த வருடம் முதல் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply