
கனடாவில் சாலையில் திடீரென மான் வந்ததால் ஏற்பட்ட கார் விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Calgary-ன் வடக்கு பகுதியில் சனிக்கிழமை காலையில் இந்த விபத்து நடந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி காரில் நபர் ஒருவர் வேகமாக வந்து கொண்டிருந்த போது சாலையில் மான் ஒன்று திடீரென வந்தது.
இதையடுத்து மான் மீது லேசமாக கார் இடித்த நிலையில் வேறுபக்கமாக ஓட்டுனர் காரை திருப்பிய போது காரானது விபத்தில் சிக்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே காரில் இருந்த ஓட்டுனர் உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் யாரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை, விபத்து நடந்த இடத்தில் மொத்தம் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply