
கிளிநொச்சி – கந்தபுரம் பகுதியில் தென்னை மரமொன்று முறிந்து விழுந்ததில் குழந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அனர்த்தம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. 1 வயதும் 2 மாதங்களும் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தையை அவரது அம்மம்மா இன்று காலை குளிப்பாட்டிக்கொண்டிருந்தபோது, குழந்தை மீது தென்னை மரம் சரிந்து விழுந்துள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் அம்மம்மா படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Leave a Reply