
இறுதிகட்ட விவாத நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும், எதிர்கட்சி தலைவர் ஜெரிமி கோர்பின் ஆகியோர் மாறிமாறி குற்றம் சுமத்தி கொண்டனர்.
பிரித்தானிய பொதுத்தேர்தல் வரும் 12ஆம் திகதி நடைபெற உள்ளது. அதற்காக இறுத்திகட்ட பிரசாரம் நடைபெற்று வரும் சூழலில், வெள்ளிகிழமை இறுதி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கன்சர்வேட்டிவ் கட்சி தலைவரும், தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரிமி கோர்பினும் நேரடியாக விவாதித்தனர். இந்நிகழ்ச்சி, பிபிசி தொலைக்காட்சியில் நடைபெற்றது.
காரசாரமான அந்த விவாத நிகழ்ச்சியில், பிரெக்ஸிட் மற்றும் பொது மருத்துவசேவை குறித்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி கொண்டனர்.
பிரெக்ஸிட் குறித்து ஜெரிமி கோர்பின் முழு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தினார்.
பிரெக்ஸிட் விவகாரத்தில் ஐரோப்பிய யூனியனுடன் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஜெரிமி கோா்பின் வலியுறுத்தினாா்.
பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய வா்த்தக உறவு தொடா்பாக ஐரோப்பிய யூனியன் மட்டுமன்றி, அமெரிக்காவுடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப் போவதாக போரிஸ் ஜான்ஸன் கூறியுள்ளது நடைமுறை சாத்தியமற்றது என கோர்பின் விமா்சித்தாா்.
இந்நிலையில், தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பில் இருகட்சிகளும் சமமான வாக்குகள் பெறுவர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
Leave a Reply