75 லட்சம் சீதனம்! யாழில் வெளிநாட்டு மாப்பிளையால் ஏமாந்த மணமகளிற்கு ஏற்பட்ட நிலை

சிங்கப்பூரில் சிவில் இஞ்சினியராக இருப்பதாக கலியாணப் புறோக்கர் சொன்னதை நம்பி கட்டட தொழிலாளியை பெருமளவு சீதனத்துடன் தமது பட்டதாரி பெண்ணுக்கு கலியாணம் கட்டிக் கொடுத்துள்ளார்கள் பெற்றோர்.

இச் சம்பவம் யாழ் திருநெல்வேலிப் பகுதியில் அன்மையில் இடம் பெற்றுள்ளது. மாப்பிளை சிங்கப்பூரில் இருப்பதாக கூறி திருமணப் பேச்சு நடந்துள்ளது.

யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் 15 வயது வரை கல்வி கற்ற மாப்பிளை 2006ம் ஆண்டு தமது குடும்பத்துடன் கொழும்பு சென்று கொழும்பில் தாய் மற்றும் தந்தை இறந்த பின்னர், தனது சகோதரிகள் இருவருடன் சித்தி வீட்டில் வசித்து வந்துள்ளார்.

பின்னர் 2010ம் ஆண்டளவில் சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்து அவர் மேசன் வேலை செய்து கொண்டிருந்த போது சித்தி அவருக்கு புறோக்கர் மூலம் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கியுள்ளார்.

சித்தியிடம் தான் அங்கு படித்து கட்டட மேற்பார்வையாளராக இருப்பதாக மாப்பிளை கூறியதை நம்பிய சித்தி புறோக்கரிடம் அந்த தொழிலை கூறிய போது புறோக்கர் இன்னும் கொஞ்சம் உயர்வாக சிவில் இஞ்சினியர் என பெண் வீட்டாருக்கு கூறி மாதம் 5 லட்சத்திற்கு மேல் சிங்கப்பூரில் உழைப்பதாகவும் கூறியுள்ளார்.

வைபர் மூலம் பெண் பார்க்கும் படலம் முடிவடைந்துள்ளது. அத்துடன் மாப்பிளை பெண்ணுடன் நல்ல இங்கிலீசில் கதைத்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் பட்டம் பெற்றிருந்த மணமகள் மாப்பிளையின் ஆங்கிலத்திற்கு சமாளிக்கமுடியாமல் திணறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந் நிலையில் கடந்த ஆவணி மாதம் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதன் பின்னர் மணப்பெண்ணின் ஒன்று விட்ட சகோதரரான பொறியியலாளர் ஒருவர் மாப்பிளையை விருந்துக்கு அழைத்து அவருடன் கதைக்க முற்பட்ட போதே மாப்பிளை தனது வேலை தொடர்பாக சமாளிக்க முற்பட்டுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அந்தப் பொறியிலாளர் சிங்கப்பூரில் உள்ள தனது நண்பர்கள் சிலரிம் விசாரித்த போது அவர் சிங்கபூரில் கட்டட நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக வேலை செய்வதை அறிந்துள்ளார்.

இதனால் பெண் வீட்டார் தற்போது கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் அத்துடன் மணப்பெண் தற்போது கர்ப்பமாக உள்ளதால் இது தொடர்பாக அவர்கள் நடவடிக்கை எடுக்க தயங்கி வருவதாகவும் தெரியவருகின்றது.

மாப்பிளைக்கு சீதனமாக 75 லட்சம் பணம் மற்றும் யாழ் திருநெல்வேலிப்பகுதியில் வீடு வளவும் கொடுக்கப்பட்டுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *