
இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சுடன் இணைந்து பணத்தை கடனாக வழங்கும் நிறுவனம் மற்றும் ஆட்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கல், அவற்றை ஒழுங்கமைத்தல், கண்காணித்தல் போன்ற செயற்பாடுகளுக்காக புதிய சட்டத்தை தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
கடனாக பணம் வழங்கும்போது ஏற்படும் முறைகேடுகள் குறித்து கிடைக்க பெற்றுள்ள முறைப்பாடுகளை முன்னிறுத்தி இந்த கண்காணிப்புக்கள் நடத்தப்படவுள்ளன.
முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு, அதிகூடிய வட்டி அறிவிடல், கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்கள் முகங்கொடுக்கும் இன்னல்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் அந்த முறைப்பாட்டில் அடங்குகின்றன.
இதன்காரணமாகவே இலங்கை மத்திய வங்கியினால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பணத்தை கடனாக வழங்கும் போர்வையில் முன்னெடுக்கப்படும் மோசடிகளுக்கு சிக்கி கொள்ளாது அது தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Leave a Reply