
நியூயார்க் ரயில் நிலையம் ஒன்றில் குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த இளம்பெண் ஒருவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
23 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளம்பெண்கள் இரவு விடுதி ஒன்றில் மதுபானம் அருந்திவிட்டு ரயிலில் பயணித்துள்ளார்கள்.
ரயிலை விட்டு தள்ளாடியபடியே இருவரும் இறங்க, ரயில் புறப்பட்டுள்ளது. ரயில் வேகமெடுக்கும்போது, அந்த 23 வயது இளம்பெண் தடுமாறி இரண்டு ரயில் பெட்டிகளுக்கிடையில், ரயில் தண்டவாளத்தில் விழுந்திருக்கிறார்.
அவரது தோழி அவரைக் காப்பாற்றுவதற்காக அவரது கையைப் பிடித்து இழுக்க முயல, அவரும் கீழே விழுந்திருக்கிறார்.

கீழே விழுந்ததில் அவரது கை உடைந்திருக்கிறது. நடந்ததைக் கவனித்த ரயிலிலிருந்த பயணிகள் சிலர் ரயிலை நிறுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்றாலும் ரயில் நிற்பதற்கு முன் அந்த 23 வயது பெண் ரயிலுக்கடியில் சிக்கி உயிரிழந்து விட்டார்.
ரயில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டு அவரது உடல் அங்கிருந்து அகற்றப்பட, அவரது தோழி அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை இதுவரை பொலிசார் வெளியிடவில்லை.

Leave a Reply