
ஜேர்மானியர் ஒருவரிடமிருந்து எலும்பு மஜ்ஜை தானம் பெற்ற அமெரிக்கர் ஒருவர், ஜேர்மானியராகவே மாறும் ஆச்சரிய நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது.
நெவாடாவைச் சேர்ந்த Chris Long, ஜேர்மானியர் ஒருவரிடமிருந்து எலும்பு மஜ்ஜை தானம் பெற்றார்.
அதன் பிறகு அவரது DNAவை சோதித்ததில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஜேர்மானியராகவே மாறிவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரது மார்பு மற்றும் தலையில் உள்ள முடி மட்டுமே இன்னமும் மாறாமல் உள்ளன. அவரது இரத்தம் மட்டுமல்லாமல், அவரது விந்தணுக்களும் கூட அவர் தானம் பெற்ற ஜேர்மானியருடையதாகவே மாறிவிட்டதை அறிந்த Long, நான் காணாமல் போய், நான் வேறொருவராக மாறுவதை எண்ண, எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார்.

இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட Longக்கு, ஜேர்மானியர் ஒருவர் எலும்பு மஜ்ஜை தானம் கொடுக்க, அந்த ஜேர்மானியராகவே மாறி வருகிறார் Long.
Washoe பகுதியில் பொலிஸ் துறையில் Long பணியாற்றிவரும் நிலையில், இப்படி நிகழும் ஒரு மாற்றம், குற்றவாளிகளிடம் நிகழ்ந்தால் எத்தகைய பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் அவரது சக பொலிசார்.
குற்றம் செய்தவருக்கு பதிலாக, அவருக்கு எலும்பு மஜ்ஜை தானம் செய்த ஒருவர் குற்றவாளி என தவறாக சிக்கிக்கொள்ளவும் வாய்ப்புள்ளது என்ற கோணத்தில் சிந்தித்துவருகிறார்கள் அவர்கள்.
இப்போது Long என்னும் எங்கள் சக அலுவலர் இல்லாமலே போய்விட்டார் என்பதை அறிந்ததையடுத்து அதிர்ந்துபோயிருக்கிறோம் என்கிறார்கள் அவரது சக ஊழியர்கள்.

Leave a Reply