தவமிருந்து பெற்ற மகனின் திடீர் மரணம்: நினைவு நாளில் தம்பதி செய்த நெகிழ வைக்கும் செயல்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பல ஆண்டுகள் காத்திருந்து இறுதியில் கிடைத்த பிள்ளை திடீரென்று மரணமடைந்த நிலையில், அவரது நினைவாக 7 இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளது ஒரு குடும்பம்.

கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த ஆன்றணி என்பவரின் குடும்பமே மகனின் 20-வது பிறந்தநாளில் ஏழை இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளது.

7 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற பிள்ளை 7-வது வயதில் திடீரென்று மரணமடைந்தபோது நொறுங்கிப் போயுள்ளது ஆன்றணியின் குடும்பம்.

ஆனால் அதன் பின்னர் அவர்கள் மகனின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் வகையில் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு 7 இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தேவாலயம் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 7 இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்ததுடன், சுமார் இரண்டாயிரம் பேருக்கு உணவும் வழங்கியுள்ளனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *