
இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்று (திங்கட்கிழமை) அமுலுக்கு வரும் வகையில் பால்மாவுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 1 கிலோ கிராம் பால்மாவின் விலை 40 ரூபாயினாலும் 400 கிராம் பால்மாவின் விலை 15 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை கடந்த 24ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 50 ரூபாயினாலும் 400 கிராம் பால்மாவின் விலை 20 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply