
பிரித்தானியாவின் சில பகுதிகளை அற்றியா என்னும் புயல் தாக்கியுள்ள நிலையில், மீண்டும் ஒரு புயல் தாக்கலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
அற்றியா என்னும் புயல் பிரித்தானியாவை மணிக்கு 70 மைல் வேகத்தில் வீசும் காற்றுகளால் புரட்டி எடுத்தது.
ஏற்கனவே, மின்சாரம் துண்டிப்பு மற்றும் போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
வட கிழக்கு இங்கிலாந்துக்கு இன்று மதியம் வரை புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை தென் மேற்கு பகுதிகளை இன்னொரு புயல் மணிக்கு 100 மைல் வேகத்தில் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Leave a Reply