
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் நிலவுவதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
காலமான ரஞ்சித் டி சொய்சாவின் மறைவை அடுத்தே இவ்வாறு வெற்றிடம் நிலவுவதாக அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
இதற்கமைய நாளைய தினம் இடம்பெறவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தின்போது அது தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.
அந்த கலந்துரையாடலின்போது எட்டப்படும் தீர்மானம் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அறிவிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து, காலமான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவிற்கு அடுத்தப்படியாக அந்த கட்சியின் சார்பில் அதிக வாக்குகளை பெற்றவர், வெற்றிடமான உறுப்புரிமைக்காக நியமிக்கப்படவுள்ளார்.
Leave a Reply