
உலகப்புகழ் பெற்ற அமெரிக்க ராப் பாடகர் Juice WRLD நேற்று கலிபோர்னியாவில் இருந்து சிகாகோவின் மிட்வே விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு திடீரென வலிப்பு(Seizures) ஏற்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கியதும் அவரை உடனடியாக மருத்துவ உதவு கொடுக்கப்பட்டுள்ளது. அவரது வாயில் இருந்து ரத்தம் கொட்டியுள்ளது. ஆனால் அவர் இறந்துவிட்டதாக அருகில் இருந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Juice WRLD ஆறு நாட்கள் முன்பு தான் பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 21 வயதான அவர் திடீர் மரணம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Leave a Reply