
நியூசிலாந்து கடற்கரையில் உள்ள வெள்ளை தீவில் எரிமலை வெடித்ததில் 20 பேர் காயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
தீவில் சிக்கியுள்ளவர்களை மீட்க அவசர குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு நியூசிலாந்து கடற்கரையில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ள நாட்டின் மிக பரபரப்பான சுற்றுலா தளமான வகாரி வெள்ளை தீவில் உள்ள எரிமலை பிற்பகல் 2:10 மணிக்கு வெடித்துள்ளது.
தேசிய வானிலை சேவை வெடிப்பை உறுதிசெய்து, வெடிப்பு மற்றும் அதன் சாம்பல் மேகத்தின் ராடார் மற்றும் செயற்கைக்கோள் படங்களை ட்வீட் செய்தது.
இப்பகுதி ஆபத்தானதாக கருதப்பட வேண்டும் என்றும் பிற்பகல் செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுவதாகவும் உள்ளுர் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
100 பேர் தீவில் அல்லது அதைச் சுற்றிய பகுதியில் உள்ளார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார். அவர்களில் சிலர் கணக்கிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஏதேனும் மரணங்கள் நடந்திருக்கிறதா என்பதை அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை, இந்த கட்டத்தில், இது ஒரு மிக முக்கியமான பிரச்னையாகத் தோன்றுகிறது என அவர் கூறினார்.
இந்நிலையில், எரிமலை வெடிப்பதற்கு முன் சுற்றுலா பயணிகள் கூட்டமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
Leave a Reply