
ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், 30 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் குடியிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் பதிலளிக்கையில், ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது என குறிப்பிட்டார்.
மேலும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என்றும் நித்தியானந்தா ராய் திட்டவட்டமாக கூறினார்.
Leave a Reply