
சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
இதற்கமைய சமன் தெய்வ சிலை மற்றும் புனித பொருட்கள் இன்று மலை உச்சியில் பிரதிஸ்டை செய்யப்படவுள்ளன.
பெல்மடுல்ல கல்பொத்தாவல ரஜமகா விஹாரையில் நேற்று விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், தற்போது சமன் தெய்வத்தின் உருவச்சிலை மற்றும் ஏனைய புனித சின்னங்கள் அங்கு கொண்டுச்செல்லப்படுகின்றன.
இதனை முன்னிட்டு நடைபெறும் ஊர்வலம் பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிட்ட, எஹெலியகொட, அவிசாவளை, தெஹியோவிட்ட, கரவனெல்ல, ஹட்டன், மஸ்கெலியா ஊடாக நல்லத் தண்ணிவரை பயணிக்கவுள்ளது.
நாளை அமையும் பௌர்ணமி தினத்துடன் ஆரம்பமாகும் சிவனொளிபாத மலை யாத்திரிகை காலம் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply