
ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாக தெரிவித்து அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றவியல் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜாங்கனை மற்றும் செவனகல பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்புத்தேகம பிரதேசத்தில் வசித்து வரும் பெண் ஒருவரிடம் ஒன்றரை இலட்சம் ரூபாயை பெற்றபோதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
Leave a Reply