நடுவானில் மாயமான விமானம்… பயணிகளின் கதி என்ன? சல்லடை போட்டு தேடும் இராணுவம்

தென் அமெரிக்கா நாடான சிலியில் 38 பேருடன் பயணித்த இராணுவ விமானம் மாயமாகியுள்ளது.

சிலி விமானப்படை அறிவித்தபடி, சி-130 ஹெர்குலஸில் இராணுவ விமானத்தில் 17 பேர் விமானக் குழு உறுப்பினர்கள் மற்றும் 21 பயணிகள் இருந்துள்ளனர்.

புன்டா அரினாஸ் நகரத்திலிருந்து சிலி அண்டார்டிக் நோக்கி, விமானம் மதியம் 2:44 மணிக்கு புறப்பட்டது. இரவு 7:17 மணிக்கு விமானம் அண்டார்டிக் பிரதேசத்தில் உள்ள ஆர்ட்டுரோ பிராட் தளத்தில் தரையிங்கியிருக்க வேண்டும்.

விமானத்திலிருந்து கடைசி அறிக்கை மாலை 5:44 மணிக்கு வழங்கப்பட்டுள்ளது. திட்டங்களின்படி மாலை 6:13 மணிக்கு புதிய அறிக்கையை வழங்கியிருக்க வேண்டும், ஆனால், அது வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் தகவல்களின்படி, விமானத்தில் இன்னும் இரண்டு மணி நேரம் இயங்கும் அளிவிற்கு எரிபொருள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிக் தளத்தின் மிதக்கும் எரிபொருள் விநியோக குழாயை மறுஆய்வு செய்வதற்கும், அப்பகுதியில் உள்ள தேசிய வசதிகளுக்கு ஆன்டிகோரோசிவ் சிகிச்சையை மேற்கொள்ள மற்றும் தளவாட பணிகளுக்கு உதவ, பணியாளர்களுடன் விமானம் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமானம், கடைசியாக தெற்கு சிலியில் காணப்பட்டதாக ரேடார் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த நபர்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *