
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், நிருபரின் போனை பறித்து தன்னுடைய பாக்கெட்டிக்குள் வைத்தற்கு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
டிசம்பர் 12ம் திகதி பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நடைபெறுவுள்ள நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. போரிஸ் ஜான்சனுடனான பேட்டியின் போது அவரிடம் பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை அமைப்பின் நிலவரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அப்போது, நடந்த சம்பவத்தை பேட்டி எடுத்த நிருபர் ஜோ பைக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
லீட்ஸ் மருத்துவமனையில் நிமோனியா இருப்பதாக சந்தேகிக்கப்படும் 4 வயது சிறுவன் ஜாக் வில்லிமென்ட்-பார் தரையில் படுத்துக் கொண்டிருக்கும் படத்தை போரிஸ் ஜான்சனுக்கு காட்ட முயற்சித்தேன்.
பிரதமர் எனது போனை பறித்து தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டார் என ட்விட் செய்துள்ளார் நிருபர் ஜோ பைக்.
அந்த வீடியோவில், போனில் காட்டப்படும் சிறுவனின் படத்தை காண மறுக்கும் போரிஸ், தான் ஏற்கனவே பார்த்துவிட்டதாகவும், குடும்பத்தினருக்கு தனது அனுதாபங்கள் என கூறினார்.
இது மிகவும் மோசமான படம், நான் சிறுவனின் குடும்பத்தினரிடமும், தேசிய சுகாதார சேவையில் மோசமான நிலையில் உள்ள அனைவரிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த வீடியோவை கண்ட மில்லியன் கணக்கானோர், நிருபரிடம் போரிஸ் ஜான்சன் நடந்துக்கொண்ட விதத்தை குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது எதிர்வரும் தேர்தலில் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
Leave a Reply