
பிகில் படத்தின் மூலம் 300 கோடி வசூல் ஈட்டி நடிகர் விஜய் பாக்ஸ்ஆபிசில் புதிய உச்சத்தை தொட்டுள்ளார்.
இது பற்றி பேட்டி அளித்துள்ள பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன், “விஜய்யால் 500 கோடியையும் தொட முடியும். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இன்னும் அதிகம் கவனம் செலுத்தினால் 500 கோடியை தொடலாம்.”
“அஜித்தாலும் அது முடியும். ஆனால் அதற்கு அவர் முயற்சி எடுக்கவேண்டும். அவர் எந்த ப்ரோமோஷனுக்கும் வரமாட்டேன் என்கிறார். விஜய் சார் ஒரு ஆடியோ நிகழ்ச்சியில் மட்டுமாவது வந்து பேசுகிறார். அதனால் பெரிய ரீச் கிடைக்கிறது. அஜித் அப்படி எதுவும் செய்யாத போது எப்படி அதை ரீச் செய்யமுடியும் என தெரியவில்லை.”
“இப்போது ப்ரோமோஷன் மிக முக்கியம். அஜித் ப்ரோமோஷனுக்கு வந்தால் அவரது மார்க்கெட் இன்னும் அதிகரிக்கும்,” என தனஞ்செயன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply