ஃப்ளிப்கார்ட்டில் 93,900 ரூபாய்க்கு ஐபோன் 11 ஆர்டர் செய்த நபர்.. ஆசை ஆசையாய் பார்சலை திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி

ஐபோன் 11 ப்ரோவை பிளிப்கார்ட்டில் இருந்து ரூ .93,900 க்கு ஆர்டர் செய்த நபருக்கு, பார்சலில் போலி போன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான 26 வயதான ராஜானி காந்த், ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃபிளிப்கார்ட்டில் இருந்து ஐபோன் 11 ப்ரோவை ரூ .93,900 க்கு ஆர்டர் செய்து முழு தொகையையும் செலுத்தியுள்ளார்.

அவர் ஆர்டர் செய்து பணம் செலுத்திய ஐபோன் 11 ப்ரோவுக்கு பதிலாக போலி ஆண்ட்ராய்டு தொலைபேசியைப் பெற்றுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் ஃபிளிப்கார்ட்டால் அவர் ஏமாற்றப்பட்டதாக ராஜானி காந்த் கூறினார்.

ராஜானி காந்த், அவருக்கு வந்த பார்சலின் உள்ளடக்கத்தைக் கண்டே அதிர்ச்சியடைந்துள்ளார். இருப்பினும், பெட்டியைத் திறந்ததும், தொலைபேசியின் கமெரா திரை போலியானது என்பதை கண்டுபிடித்துள்ளார்.

தொலைபேசியின் மென்பொருள் ஐஓஎஸ் (IOS) அல்ல. அதனுடன் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளும் கலந்திருக்கின்றன என்று அவர் கூறினார்.

விற்பனையாளர்கள், குறிப்பாக மூன்றாம் தர நிறுவனங்கள், பிளிப்கார்ட்டை விற்பனை தளமாகப் பயன்படுத்துகின்றன, அதில் போலி தயாரிப்புகளை விற்பனை செய்கின்றன என குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில், ராஜானி காந்த் பிளிப்கார்ட்டை தொடர்பு கொண்டுள்ளார், உடனடியாக அவரது ஆர்டர் மாற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது வரை அவருக்கு மாற்று போனை பெறவில்லை.

உண்மையில், இதுபோன்று போலி தொலைபேசி வழங்கப்படுவது இதுவே முதல் முறை அல்ல. மாம்பழங்கள், கற்கள், செங்கற்கள், சோப்பு, தவறான தயாரிப்புகள் மற்றும் குப்பைகளைப் பெற்ற பலர் காலப்போக்கில் சமூக ஊடகங்களை நாடியுள்ளனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *