
ஐ.எஸ் இயக்கத்திற்கு தரகர் வேலை பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரான்ஸ் பெண், துருக்கியிலிருந்து சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
25 வயதான டூபா கோண்டல், குழந்தை பருவத்திலே பிரான்ஸிலிருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்துள்ளார். முன்னதாக, தனக்கு பிரிட்டிஷ் நிரந்திர குடியுரிமை உள்ளதாக கோண்டல் கோரியிருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் மீண்டும் பிரித்தானியாவிற்குள் நுழைய உள்துறை அலுவலகம் அவருக்கு தடை விதித்தது.
லண்டனில் உள்ள கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ள கோண்டல், ஐ.எஸ் குழுவினருக்கு திருமண ஏற்பாடு செய்யும் தரகராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிரியாவில் முகாம்களில் உள்ள போராளிகளை சொந்த நாட்டிற்கு அனுப்பும் துருக்கி அரசாங்கத்தின் திட்டத்தின் பகுதியாக கோண்டல் பிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
கோண்டலுடன் அவரது 7 குழந்தைகள், மற்ற 3 பெண்கள் பிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர் எதிர்கொள்ளும் தீவிரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள கோண்டல் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரின் குழந்தைகள் வளர்ப்பு பராமரிப்பு மையத்தில் உள்ளனர். 2015ம் ஆண்டு லண்டனில் இருந்து வெளியேறி ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்த கோண்டல், கடந்த ஆக்டோபர் மாதம் பிரித்தானியாவிற்குள் தன்னை மீண்டும் அனுமதிக்குமாறு கடிதம் எழுதினார். அதனையடுத்தே, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சிரியாவில் உள்ள வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளை திருப்பி அனுப்பும் திட்டத்தின் பகுதியாக 11 பிரான்ஸ் நாட்டினரை பிரான்சுக்கு நாடு கடத்தியதாக துருக்கி உறுதிப்படுத்தியது.
Leave a Reply