
புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் 1471 குடும்பங்களைச் சேர்ந்த 5067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம், முந்தல், கல்பிட்டி, வண்ணாத்திவில்லு, நவகத்தேகம, சிலாபம், மகாகும்புக்கடவல, மகாவெவ மற்றும் பள்ளம ஆகிய ஒன்பது பிரதேச செயலாளர் பிரிவுகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதில் கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் 870 குடும்பங்களைச் சேர்ந்த 2835 பேரும் முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் 268 குடும்பங்களைச் சேர்ந்த 988 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறே புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் 91 குடும்பங்களைச் சேர்ந்த 274 பேரும் நவகத்தேகம பிரதேச செயலகப் பிரிவில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேரும் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகப் பிரிவில் 81 குடும்பங்களைச் சேர்ந்த 292 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மகாகும்புக்கடவல பிரதேச செயலகப் பிரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேரும் மகாவெவ பிரதேச செயலாளர் பிரிவில் 90 குடும்பங்களைச் சேர்ந்த 459 பேரும் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, பள்ளம பிரதேச செயலகப் பிரிவில் 01 குடும்பத்தைச் சேர்ந்த 03 பேரும் சிலாபம் பிரதேச செலயலகப் பிரிவில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கல்பிட்டி மற்றும் வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள 44 குடும்பங்களைச் சேர்ந்த 174 பேர் இரு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுனர். அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் மாவட்டத்தில் 23 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



Leave a Reply