
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான குமாரசிங்க சிறிசேன தற்போதும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அனைத்து அரச மற்றும் அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகளை இராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.
எனினும் அந்த உத்தரவை மீறி மைத்தியிரின் சகோதரர் இந்த பதவியில் தொடர்ந்தும் செயற்படுவதாக ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
குமாரசிங்க சிறிசேன அந்த பதவியில் இராஜினாமா செய்வதற்கு தயாரில்லை எனவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
டெலிகொம் நிறுவனத்தின் தலைவருக்கு இரண்டு மில்லியன் ரூபா மாத வருமானம் மற்றும் அனைத்து சலுகைகளுக்காகவும் மாதம் 90 இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
Leave a Reply