
இலங்கைக்கு சென்றிருந்த போது அந்நாட்டு ராணுவத்தினர் தன்னை அடித்து காயப்படுத்தினார்கள் என இயக்குனர் களஞ்சியம் கூறிய நிலையில் அதை ராணுவம் மறுத்துள்ளது.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மு. களஞ்சியம் மாவீரர் நாள் நிகழ்ச்சிக்காக கடந்த மாதம் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார்.
அங்கு அதிகாரிகள் தன்னை சீமான் கட்சியா என கேட்டு மிரட்டியதாகவும், பின்னர் ராணுவத்தினர் தன்னை 5 மணி நேரம் கடுமையாக தாக்கியதாகவும் கூறினார்.
இதையடுத்து இரத்த காயங்களுடன் ஊருக்கு திரும்பியதாக அவர் கூறினார். இது குறித்த செய்தியை விகடன் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் களஞ்சியத்தின் இந்த குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது.
இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் சுமித் கூறுகையில், இது தொடர்பாக வந்த செய்திகளில் எந்தவொரு உண்மையும் கிடையாது என கூறியுள்ளார்.
Leave a Reply