
விஜய்- ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் இரண்டாவதாக வந்த படம் கத்தி. இப்படம் விவசாயிகளின் கஷ்டத்தை பற்றி பேசியது, பல சர்ச்சைகளும் படம் ரிலீஸின் போது இருந்தது.
அப்படி ஒரு பிரச்சனை என்றால் இது என்னுடைய கதை என்று உதவி இயக்குனர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தற்போது இந்த வழக்கிற்கு மதுரை கிளை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில், இந்த வழக்கில் இருந்து நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ் மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோர் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பில் உள்ளது.
இந்த தீர்ப்பு படம் வெளியாகி 5 வருடத்திற்கு பிறகு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply