
வடக்கு மாகாணத்துக்கான ஆளுநர் நியமனம் தொடர்பில் ராஜபக்ச அரசுக்குப் பலமுறை எடுத்துரைத்தபோதும் அரசு இது தொடர்பில் ஆர்வம் காட்டவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு மாகாணத்துக்கு இன்னும் ஆளுநர் ஒருவரை நியமிக்காமல் ராஜபக்ச அரசு இழுத்தடிப்பதனால், பெரும்பாலான தீர்மானங்களை எடுப்பதற்கு முடியாத ஒரு நிலைமை உருவாகியுள்ளது. இது தொடர்பில் பல்வேறு தடவைகள் அரசுக்கு நினைவுபடுத்தினோம்.
வேறு மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிப்பதற்கு அரசுக்குள்ள ஆர்வம் வடக்கு மாகாண விடயத்தில் காணப்படாதுள்ளது.
ஆளுநர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக வருட இறுதியில் வழங்கப்படவுள்ள இடமாற்றங்கள், மாகாணத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் என்பன செயற்பட முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது, என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply