
இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் விளையாட்டு போட்டியின் இடையே பிள்ளைக்கு பாலூட்டிய வீராங்கனையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
மிசோராமில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு துவக்க விழா நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கைப்பந்தாட்டம் நடந்துள்ளது.
இந்த கைப்பந்து போட்டியின் இடைவெளியிலேயே வீராங்கனை ஒருவர் தமது 7 மாத பிள்ளைக்கு பாலூட்டியுள்ளார்.
குறித்த புகைப்படம் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. சிலர் அவரை அதிசய பெண்மணி என அழைத்துள்ளனர்.

பிள்ளை பிறந்து வெறும் 7 மாதங்களில் விளையாட்டுக்காக தம்மை தயார் படுத்திக் கொண்டு களத்திலும் சாதித்துள்ளது அவரது அர்ப்பணிப்பை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
சிலர், இவர்களை போன்ற தாய்மார்கள்தான் நாட்டுக்கு பெருமை, இவர்களை ஆதரிப்பதில் பெருமை கொள்வோம் என குறிப்பிட்டுள்ளனர்.
Leave a Reply