அரச நிறுவன தலைவர்களிற்கு வந்தது ஆப்பு

அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு புதிய சம்பள கட்டமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

புதிய சம்பள கட்டமைப்பின்படி, அந்த பதவிகளில் உள்ளவர்களின் சம்பளம் கணிசமாகக் குறைக்கப்படும்.

தலைவர், அரச நிறுவனங்களின் பணிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்சபை பதவிகளில் உள்ளவர்களிற்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அரசாங்க நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கு நபர்களை நியமிப்பது பெரும்பாலும் அரசியல் நியமனமாகவே உள்ளது.

அவர்களுக்கு அதிக சம்பளம் மற்றும் பிற கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற அதிக சம்பளம் பெறும் அரசு நிறுவனங்களின் சம்பளத்தை குறைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளார்.

அரசு நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கு தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க புதிய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரையின் பேரில், பல அரச நிறுவனங்களின் தலைவர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *