
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்த பயணியும் கட்டுநாயக்க விமான நிலைய தீர்வையற்ற வர்த்தக நிலைய ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடனான 99 தங்க பிஸ்கட்களை பெட்டிக்குள் மறைத்து கொண்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் நுழையும் பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் அவுஸ்திரேலியாவில் இருந்து வருகைதந்த 45 வயதுடைய குருணாகல், புத்தளம் வீதியில் வசிக்கும் சிவில் பொறியியலாளர் என தெரியவந்துள்ளது.
நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் சிங்கப்பூரிவில் இருந்த இலங்கைக்கு வந்த ஸ்ரீ லங்கன் விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து வந்தவர் இலத்திரனியல் உபகரணங்கள் சிலவற்றை கொள்வனவு செய்வதற்காக விமான நிலைய தீர்வை வரியற்ற நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.
அங்கு சேவை செய்த 30 வயதான எம்பிலிப்பிட்டிய பிரதேத்தை சேர்ந்த ஊழியர் இந்த இலத்திரனியல் உபகரணங்கள் அடங்கிய பெட்டிக்குள் தங்க பிஸ்கட்களை மறைத்து கொடுத்துள்ளார். அதனை தனக்கு நெருக்கமானவரிடம் ஒப்படைக்குமாறு குறித்த ஊழியர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சிவில் பொறியியலாளர் இந்த பெட்டியை விமான நிலைய வெளியேறும் பகுதிக்கு கொண்டுவரும் போது கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கமைய 99 தங்க பிஸ்கட்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
Leave a Reply