
இலங்கையில் இருந்து சுவிஸ் தூதுவர் ஹான்ஸ்பீற்றர் மொக் திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்திகளை சுவிஸ் அரசாங்கம் நிராகரித்துள்ளது.
கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகப் பணியாளர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து, சுவிஸ் தூதுவரை அந்த அரசாங்கம் அழைத்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள சுவிஸ் வெளிவிவகார திணைக்கள பேச்சாளர், “இந்த தகவல் சரியானது அல்ல. சுவிஸ் தூதுவர் தற்போது கொழும்பிலேயே இருந்து பணியாற்றி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி இன்று நான்காவது நாளாகவும் குற்றப்பபுலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply