
திருக்கார்த்திகை விளக்கீட்டினை முன்னிட்டு யாழ்.கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள தமிழக முன்னால் முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.இராமசந்திரன் சிலைக்கு தீபம் காட்டி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் அவரது தீவிர ரசிகனுமான யாழ்.எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் காட்டி அஞ்சலி செலுத்தினார்.
அதனை தொடர்ந்து வலி- கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் ராசேந்திரம் செல்வராஜா, நல்லூர் பிரதேசபை உறுப்பினர் தெய்வேந்திரம் கிரிதரன், கல்வியங்காடு வர்த்தக சங்க தலைவர் ஆ.கேதீஸ் மற்றும் யாழ்.எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
யாழ்.கல்வியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலை, எம்.ஜி.இராமசந்திரனின் நண்பன், யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply