
உலகிலேயே குழந்தைகளின் ஆபாச படத்தை அதிகம் பார்க்கும் நாடு இந்தியா என தெரியவந்த நிலையில் இது தொடர்பில் தமிழகத்தை சேர்ந்த நபர் முதல் ஆளாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.க்கு, குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் குவிந்தன.
இது குறித்த ஆய்வில் இறங்கிய எஃப்.பி.ஐ குழந்தைகளின் ஆபாச படங்களை அதிகம் பார்க்கும் நாடு இந்தியா என்றும், அதிலும் குறிப்பாக சென்னைக்கு முதலிடம் எனவும் தெரிவித்தது.
இந்த தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் குழந்தைகள் சம்மந்தப்பட்ட ஆபாசப்படம் பார்க்கும் தமிழகத்தைச் சேர்ந்த 3000 பேரின் பட்டியல் மாவட்ட வாரியாக தயார் என காவல்துறை அதிகாரி ரவி சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
இதையடுத்து குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ் என்பவர் முதல் ஆளாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நிலவன் ஆதவன் என்கிற போலி கணக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply