
தமிழ் சினிமாவே பெருமைப்படும் அளவிற்கு கொண்டாடப்படும் ஒரு நடிகர் ரஜினிகாந்த்.
இன்று இவருக்கு பிறந்தநாள் அவரோ இங்கு இல்லை, ரசிகர்கள் வீட்டின் முன் காத்துக் கொண்டிருக்க போகிறார்கள் என்று ஏற்கெனவே பிறந்தநாள் அன்று இங்கு இல்லை என கூறிவிட்டார்.
இவரை பற்றி பலரும் பேசிவரும் நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், 1975ம் ஆண்டு ஒரே ஒரு படம் தான் நடித்தார், 1976ல் 4 படம், 1977ல் பிரபலமான நடிகராகி தமிழ், தெலுங்கு, கன்னடம் என 15 படங்கள் நடித்தார்.
1978ம் ஆண்டு பார்த்தால் 21 படம் நடித்தார். ஒரு வருடத்தில் 21 படம் என்றால் சாதாரண விஷயம் கிடையாது.
1975ல் பயணத்தை ஆரம்பித்த அவர் 85வது வருடமே 100வது படம் நடிக்கிறார். 10 வருடத்தில் 100 படங்கள் என்பதை எந்த நடிகரும் தொடவில்லை. இதுதான் ரஜினி அவர்களின் உழைப்பு.
40 வருடம் கடந்த பிறகும் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் ஒரே நடிகர் அவர்தான் என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
Leave a Reply