
இலங்கையை அழகுபடுத்தும் தொனிப்பொருளின் கீழ் மட்டக்களப்பு இளைஞர்கள் நகர் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் விடுதியின் சுற்று மதில் சுவருக்கு வர்ணம் பூசும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களது கலாச்சாரத்தையும் திறமைகளையும் வெளிப்படுத்தும் நோக்கத்துடன் வர்ணம் பூசும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம் என இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
எவருடைய ஒத்துழைப்புமின்றி இளைஞர்களாகிய நாங்கள் இந்த திட்டத்தை முதலில் கையில் எடுத்து இதனை இரவு பகலாக கொட்டும் மழையிலும் மேற்கொண்டு வருகின்றோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Leave a Reply