
பிரித்தானியாவில் இன்னும் சில மணி நேரங்களில் பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பென்குயின் ஒன்று இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து கணித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
பிரித்தானியாவில் பொது தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு இன்னும் சில மணி நேரங்களில் துவங்கவுள்ளது. இதற்காக தேர்தலில் போட்டியிடும் போட்டியினர் மற்றும் கட்சியினர் பரபரப்பாக உள்ளனர்.

இந்நிலையில் லண்டனின் Gentoo Penguin Care-ல் இருக்கும் பென்குயின்கள் மத்தியில் இந்த தேர்தலில் போட்டியிடும் முக்கிய போட்டியாளர்களின் புகைப்படங்களோடு இருக்கும் வாலிகள் வைக்கப்பட்டது.
அதன் படி ஒவ்வொன்றாக வந்த பென்குயின்கள் அங்கிருக்கும் வேலியில் அமர்ந்து கொண்டதாகவும், Ziggy என்ற பென்குயின் மட்டும் தொழிலாளர் கட்சியின் வேட்பாளரான Jeremy Corbyn வெற்றி பெறுவார் என்ற வகையில், அவருடைய வாலியை தொட்டது.

இதனால் பென்குயினின் கருத்தப்படி பார்த்தால், Jeremy Corbyn வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டாலும், தேர்தலின் முடிவின் எண்ணிக்கையில் இறுதி முடிவு தெரியும். அதே போன்று கடந்த 2017-ஆம் ஆண்டு தொங்கு பாராளுமன்றத்தை சரியாக கணித்த YouGov’s கருத்துக் கணிப்பு, போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி வியாழக்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறும் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply