பிரித்தானிய தேர்தலில் போட்டியிடும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட வேட்பாளர்!

பிரித்தானிய பொதுத்தேர்தலில் போட்டியிடும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட வேட்பாளர் ரணில் ஜெயவர்தனே டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன்னர் தொடங்கியது.

இதில் கன்சர்வேட்டிங் கட்சி சார்பில் North East Hampshire தொகுதியில் ரணில் ஜெயவர்தனே என்பவர் போட்டியிருகிறார்.

ரணில் கடந்த 1986ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தவர் ஆவார்.

இவரின் தந்தை நலின் ஜெயவர்தனே இலங்கையை சேர்ந்தவர், அவர் கடந்த 1978ஆம் ஆண்டு இலங்கைக்கு குடிபெயர்ந்தார்.

அதே போல ரணிலின் தாய் இந்திரா இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் ஆவார்.

இந்நிலையில் ரணில் ஜெயவர்தனே சற்று முன்னர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ஒவ்வொரு வாக்கும் கணக்கில் ஏற்கப்படும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள்.

வேறு கட்சிக்கு வாக்களித்தால் அது எதிர்க்கட்சி தலைவர் Jeremy Corbyn பிரதமர் இல்லம் இருக்கும் Downing Streetக்கு வருவதற்கே உதவி செய்யும் என பதிவிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *