
மத்தள விமான நிலையத்தினை விற்பனை செய்ய தயார் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உடுகம்பொலவில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மத்தள விமான நிலையத்தை முறைப்படி முகாமைத்துவம் செய்வது தொடர்பாக தான் வெளியிட்ட கருத்தினை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் எந்தவித அடிப்படையுமற்றவை எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மத்தள விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அது மூடப்பட்டு, நெல் களஞ்சிய சாலையாக பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply