மாணவர்களுக்கு தொழிநுட்பவியல் சார்ந்த பட்டம்

பல்கலைக்கழக வாய்பை பெறாத மாணவர்களுக்கு தொழிநுட்பவியல் சார்ந்த பட்டம் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உயர்தரத்தில் சித்தியடைந்திருந்த போதிலும் பல்கலைக்கழக வாய்பை பெறாத மாணவர்களுக்கு தொழிநுட்பவியல் சார்ந்த பட்டம் ஒன்றை வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த செயற்பாட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்களது ஆட்சிக்காலத்தில் கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் செய்யப்படும் என தேர்தல் காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *