
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(புதன்கிழமை) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
‘வவுனியா புதிய பேரூந்து நிலையப் பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த பேரூந்தில் இருந்து இறங்கி சென்ற இரு இளைஞர்களையும், அவர்களது பொதிகளையும் சோதனை செய்த போது கேரளா கஞ்சா வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதுடன், உடமையில் இருந்த கஞ்சாவும் மீட்கப்பட்டத்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த வவுனியா மது போதைவஸ்து தடுப்பு பிரிவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Leave a Reply