
10 வருடங்களுக்குப் பின்னர் அரிய சூரிய கிரகணத்தை காணும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ளது.
அதற்கமைய இந்த வாய்ப்பு எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கையர்களுக்கு கிட்டவுள்ளதாக ஆர்த்தர் சி.க்ளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு பகுதிக்கு இந்த சூரிய கிரணம் முழுமையாக தென்படும் என அந்த மத்திய நிலையத்தின் உடுத்தொகுதிகள் பிரிவின் விசேட ஆய்வாளரான ஜனக அடஸ்சூரிய தெரிவித்துள்ளார்.
மன்னாருக்கு மேல் திசையில் உள்ள பகுதிகளில் இந்த நிலைமையை அவதானிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை முதலான மாவட்டங்களுக்கு இந்த சூரிய கிரகணம் முழுமையாக தென்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், தென் பகுதியில் இந்த சூரிய கிரகணம் பகுதி அளவிலேயே தென்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக வவுனியாவுக்கு கீழ் திசையில் கொழும்பு, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் காலி முதலான பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் பகுதி அளவிலும் தென்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 26ஆம் திகதி காலை வேளையில் இந்த சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் என்றும் முழுமையான சூரிய கிரகணம் காலை 8.09க்கு ஆரம்பமாகி முற்பகல் 11.21 அளவில் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சூரிய கிரகணத்தை வெற்றுக்கண்களினால் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என ஜனக அடஸ்சூரிய தெரிவித்துள்ளார்.
விசேட கண்ணாடியோ அல்லது பாதுகாப்பு உபகரணத்தையோ பயன்படுத்துவது சிறந்ததாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களினால் பார்ப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஆர்த்தர் சி.க்ளாக் மத்திய நிலையத்தின் உடுத்தொகுதிகள் பிரிவின் விசேட ஆய்வாளரான ஜனக அடஸ்சூரிய தெரிவித்துள்ளார்.
Leave a Reply