
இலங்கை வீரர் நிரோஷன்ட டிக் வெல்லாவை, தனஞ்சஜெய டி சில்வா என்று தவறாக நினைத்து பாகிஸ்தான் நிருபர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியது செம காமெடியாக அமைந்தது.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நவம்பர் 11ம் திகதி தொடங்கியது. மழை குறுக்கிடுவதால் போட்டி தடைப்பட்டு வருகிறது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடி வரும் இலங்கை அணி, இரண்டாவது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தனஞ்ஜெய டி சில்வா 72, தில்ருவன் பெரேரா 2 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். மழை காரணமாக 3வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள், இலங்கை வீரர் நிரோஷன் டிக்வெல்லாவை தனஞ்சய டி சில்வா என்று தவறாக நினைத்து கேள்விகளை எழுப்பினர். டிக்வெல்லா 33 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் நன்றாக விளையாடினீர்கள் என நிருபர் கூறத் தொடங்கியதும் குறுக்கிட்ட டிக்வெல்லா, நான் டிக்வெல்லா. நான் டி சில்வா இல்லை என கூறினார்.
இதனையடுத்து, உடனே மற்றொரு நிருபர், இந்த ஆடுகளத்திலும் இந்த நிலைமைகளிலும் நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். இந்த ஆடுகளத்தில் சதம் அடிப்பீர்களா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த டிக்வெல்லா, நீங்கள் என்னையா சொல்கிறீர்கள்? நான் டிக்வெல்ல, தனஞ்ஜெய டி சில்வா இல்ல. நான் அவுட்டாகிவிட்டேன். நான் ஏற்கனவே பெவிலியனில் இருக்கிறேன். இரண்டாவது இன்னிங்ஸில் வேண்டுமானால் சதம் அடிக்க வாய்ப்பு இருக்கலாம் என கூறினார்.
Leave a Reply