
வவுனியா, ஓமந்தை – வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவத்தினர் உள்ளிட்ட ஐவர் காயமடைந்துள்ளனர்.
இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும், சிறிய ரக வாகனம் ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே நேற்றிரவு (வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் நான்கு இராணுவத்தினர் உள்ளிட்ட ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Leave a Reply